இடுகைகள்

Nilaa லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீ நான் நிலா.....

படம்
நீ நான் நிலா......       பயணம் தொடர்கிறது...... நீ நான் நிலா.... பயணம் தொடர்கிறது .... வானவில் தோரணம் வாழ்க்கை பயணம் .... எங்கும் வண்ணங்கள் .... வெண்மேக கூட்டங்கள் இடையிலே வானவில் தோரணம் முகிலெடுத்து முகம் துடைத்து வண்ணங்களின் தூரல்கள்.... பயணம் தொடர்கிறது... நீ... நான்...நிலா.....  எல்லாம் சில காலம்தான் ... ஆரம்பத்தில் இருக்கும் வசீகரம் கடைசிவரை இருப்பதில்லை ... நம்மை விரும்பிய உறவும் சரி நாம் விரும்பிய பொருனாலானாலும் சரி... நீ நான் நிலா... பயணம் தொடர்கிறது.... சில நினைவுகள் சுகாமயினும் பல நினைவுகள் பகல் கனவுகளாக.... பயணம் சில பூஞ்சோலைகளிலும்... சில நினைவுகள் வெறுமை நிறைந்தும்... பயணம் தொடர்கிறது...  மனது முழுதுமாய் நிலவை நோக்கிய பெயர்வு... நிலா நீ நான் காற்று.... வண்ணமிகு நாள் நிலா பயணம்... கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம் பயணம் தொடர்கிறது.... பல மணிதுளிகள் போராட்டம் நிலவு உதயம்.... ஆயிரமாயிரம் கனவுகளை.... ஒரு நொடி நிஜமக்கியது.... ஆம் நிலா என் கைகளில் .... தவழ்கிறது... மவுனமாக வசீகரமாக.... எல்லையில்லா ஆனந்தம் மனம் பறக்கிறது எங்கோ.... பல கனவுகளை நினைவாக்கிய தருணம்...