மரபுக்கவிதையும், புதுக்கவிதையும்

மரபுக்கவிதையும்,புதுக்கவிதையும்

Difference between Tamil Marabu kavithai and PUTHU kavithai

  • மரபுக்கவிதை, புதுக்கவிதை:

  • மரபுக்கவிதை: 

  •    இலக்கண, இலக்கியங்களைப் பயின்று யாப்பு விதிகளையும், ஓசைநலங்களையும் உள்வாங்கி சீரும், தளையும் சிதயாமல் வரையறுத்த அமைப்பில் பா புனைவது மரபுக்கவிதை.

  • புதுக்கவிதை:

  •     இலக்கணக் கட்டுக்குள் நில்லாது உணர்ச்சி வெளிப்பட பாடுவது புதுக்கவிதையாகும்.

  • கவிதை - படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது கவிதை இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம், இதன் மூலம் மற்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது கவிதையின் பண்பாகும்.

  • மரபுக்கவிதை - புதுக்கவிதை,

     பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரி என பல பா வடிவங்களில் மரபுக்கவிதை புனைந்தனர். இவ்வாறு உள்ள வடிவங்கள் மாறிய பாக்கள் புதுக்கவிதைகளாகின்றன.

  • புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி:

  •    வால்ட் விட்மனின் ' புல்லின் இதழ்கள்' எனும் புதுக்கவி நூலினை அறிந்த பாரதி தானும் தமிழில் புத்துக்கவி புணய எண்ணி ' காட்சிகள் ' எனும் தலைப்பில் புதுக்கவிதை படைத்தார்.
    இந்த புதுக்கவிதைக்கு பாரதி இட்ட பெயர் "வசனகவிதை" என்பதாகும்.
    பாரதியின் வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், வள்ளிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் தமிழ் புதுக்கவிதை வளர்த்தனர்.

  • புதுக்கவிதை வளர்ந்த காலங்கள்:

  •    1. மணிக்கொடிகாலம்
  •    2. எழுத்துக்காலம்
  •    3. வானம்பாடிகாலம்

  •      இந்த காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைக்கு பொலிவூட்டின.

  • 1. மணிக்கொடிகாலம்:

  •    மணிக்கொடிக்காலத்தில் மணிக்கொடி இதழுடன் சூறாவளி, காலமோகினி, கிராம ஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி, ஆகிய இதழ்களும் புதுக்கவிதை வெளியிட்டு வந்தன.
  • இக்காலத்தில் புதுக்கவிதையின் முன்னோடிகளான ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராசகோபாலன், க.ந.சுப்ரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர்.

  • 2. எழுத்துக்காலம்:

  •    எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் புதுக்கவிதையினை வளர்த்தன.
  • ந. பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம் எழுத்து இதழில் தொடர்ந்தது.
  • மயன், சிட்டி, வள்ளிக்கண்ணன், ஆகியோருடன் சிசுசெல்லப்பா,க.ந.சுப்ரமணியன், போன்றோர் இக்கால சிறப்பு சேர்த்தனர்.

  • 3. வானம்பாடிகாலம்:

  •    வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை, உள்ளிட்ட இதழ்கள் இக்கால புதுக்கவிதை வெளியிட்டன.
  • புவியரசு, முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கைகொண்டான், தமிழ்நாடன், சக்திகணல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன், முதலியோர் வானம்பாடிக் கால கவிஞர்களாவர்.


  • மரபுக்கவிதை: 

  •              மரபுக்கவிதை காலத்தால் முந்தையது பல்வேறு இலக்கிய நூல்களாக இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தழைத்து விளங்கும் சிறப்புடையது, புதுக்கவிதை இருபதாம் நூற்றாண்டில் தோன்றி செழிக்கத் தொடங்கியது....

  • தோற்றம்: 

  •       தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையான இலக்கண நூலாகும்...
    மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்நூல்
    இதற்கும் முந்தைய இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன அவ்விலக்கண நூல்கள் "எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல" இலக்கியதிலிருந்து இலக்கண நூல்கள் ஏற்படுகின்றன என்னும் விதிக்கு இணங்க தமக்கு முற்பட்ட இலக்கியங்களை கொண்டு இலக்கணம் வகுதனவாம்...
    இலக்கண நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து சொல் அகம் - புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி
    ஆகியன பற்றிய வரையறைகள் இடம் பெற்றிருக்கும். எனவே செய்யுள் என்னும் கவிதை வடிவம் ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொண்மையுடையது என உறுதிபட கூறலாம்...
    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களை தொல்காப்பியம் எடுதுக்கூறுகின்றது...
    இறையனார் களவியல் உரையில் மறைந்துபோன சங்க நூல்களின் குறிப்புகள் உள்ளன.
    முடுகுருகு, முதுநாரை, களரியாவிரை ஆகிய தலைசங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகியன இடைச்சங்க நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து மறைந்த நூல்களுள் அடங்கும்.
    மயிலை சீனிவேங்கடசாமி
    "மறைந்துபோன தமிழ்நூல்கள்" என்ற இவ்வகையான நூல்கள் பற்றிய தனி ஒரு நூலினை எழுதியுள்ளார். இதன்மூலம் மரபுகவியின் தொன்மயினை அறியலாம்...

  • தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்திடும்
  • சூழ்கலை வாணர்களும் - இவள்
  • என்று பிறந்தவள் என்றுண ராத
  • இயல்பின ளாம்எங்கள் தாய்
  •  மரபுக்கவிதையின் தொண்மையினை பாரதியின் பாடல் தெரிவிக்கிறது.

  • மரபுக்கவிதை கவிஞர்கள்:

  •  பாரதியார்:

  •       சுப்ரமணிய பாரதியார் (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)
    கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூகசீர்திருத்தவாதி மற்றும் விடுதலை போராட்ட வீரர்.
    இவரை மகாகவி என்றும் பாரதியார் என்றும் அழைக்கின்றனர்.
    தமிழ், தமிழர்களின் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்தும் கவிதைகள், கட்டுரைகள் 
    இயற்றி நவீன தமிழுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
    தம் எழுதுக்களினால் மக்கள் மனதில் விடுதலை உணர்வினை ஊட்டினார்.
    இவரின் கவிதிறன் கண்டு எட்டப்ப நாயக்கர் பாரதி என்னும் பெயரினை வழங்கினார்.
    பாரதியாரின் நூல்கள் 1949ம் ஆண்டில் தமிழ்மாநில அரசினால் இந்தியாவிலேயே முதன்முறையாக நாட்டுடமையாக்கப்பட்ட இலக்கியமாகும்.
    பாலகங்காதர திலகர், உ.வே.சா, வா.உ.சி, மகான் அரவிந்தர் ஆகியோர் பாரதியாரின் சமகால மனிதர்களாவர்.
    பாரதி தன் குருவாக விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை கருதினார்.

  • பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன்
  • பிறப்பு - 11, திசம்பர் 1882 எட்டயபுரம், தூத்துக்குடி 
  • இறப்பு - 11, செப்டம்பர் 1921, சென்னை, தமிழ்நாடு
  • இருப்பிடம் - திருவல்லிக்கேணி, சென்னை.
  • மற்றபெயர்கள் - மகாகவி, பாரதியார், சுப்பையா, முண்டாசு கவி, சக்திதாசன்.
  • பணி - பத்திரிக்கையாசிரியர், கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி.
  • படைப்புகள் - பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல...
  • பெற்றோர் - சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
  • மனைவி - செல்லம்மாள்
  • பிள்ளைகள் - தங்கம்மாள் - (பிறப்பு 1904), சகுந்தலா (பிறப்பு 1908)
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
  • இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  • துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  • பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று
  • விட்ட போதிலும்
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  • இச்சைகொண்டே பொருளெல்லாம் இழந்துவிட்ட
  • போதிலும்
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  •                                     - பாரதியார்
பாரதிதாசன்:

                  பாரதிதாசன் ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964 இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பாரதியாரின் மீது கொண்ட பற்றுதலினால் தன் பெயரினை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தன் எழுச்சி மிக்க எழுத்தினால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கின்றனர். கவிதை வடிவிலான குயில் என்னும் மாதநாளிதல் நடத்திவந்தார். 


கவிதை:

   அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்திட்டானோ!


கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை


    கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - சூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954 கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த இவர் புகழ் பெற்ற கவிஞர் ஆவார். இவர் பக்தி பாடல்கள், இலக்கியப் பாடல்கள், வரலாற்றுக் கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்க்கை கவிதைகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், கையறு நிலைக் கவிதைகள், தேசியக் கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள் என பலவற்றை தம் படைப்புகளில் வழங்கியுள்ளார்.

பாடல்:

ஈயும் எனக்குத் தோழன் - ஊறும்
     எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
நரியும் எனக்கு நண்பன்.

நாமக்கல் கவிஞர்

         நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19,1888 - ஆகஸ்ட் 24,1972 தமிழறிஞர், கவிஞர் இவர் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருது' போன்ற தேசபக்தி மிக்க பாடல்களை பாடிய இவர் தேசியத்தையும் காந்தியத்தையும் போற்றினார். முதலில் பால கங்காதர திலகர் போன்றோரின் தீவிரவாதத்தில் ஈர்க்கப்பட்டு பின்னர் காந்தியின் அரப்போராட்ட கொள்கைகளை பின்பற்றினார். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி இருந்ததினால் இவர் காந்தியக் கவிஞர் என அறியப்பட்டார்.
கவிஞரின் தேசப்பற்று:
    முத்தமிழிலும், ஓவியம் வரைவதிலும் திறம் பெற்ற இவர் சிறந்த சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்று சிறை படுத்தப்பட்டார்.
உப்புச்சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட தொண்டர்களின் வழிநடை பாடலை இயற்றி தந்தார்


கத்தி யின்றி ரத்த மின்றி 
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்

கவிஞரின் நூல்கள்:


  • மலைக்கள்ளன் (நாவல்)
  • ‌காணாமல் போன கல்யாண பெண் (நாவல்)
  • ‌நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  • ‌திருக்குறளும் பரிமேலழகரும்
  • ‌திருவள்ளுவர் திடுக்கிடுவார்
  • ‌திருக்குறள் புது உரை
  • ‌கம்பனும் வால்மீகியும்
  • ‌கம்பன் கவிதை இன்பக் குவியல்
  • ‌என் கதை (சுயசரிதம்)
  • ‌அவனும் அவளும் (கவிதை)
  • ‌சங்கொலி (கவிதை)
  • ‌மாமன் மகள் (நாடகம்)
  • ‌அரவணை சுந்தரம் (நாடகம்)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

   பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13,1930 - அக்டோபர் 8,1959) சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் எளிய தமிழில் சமூகசீர்திருத்த கருத்துகளை வலியுறுத்தி பாடுவது இவரின் சிறப்பியல்பு ஆகும். இவர்தம் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பாடல்:

  சித்தர்களும் யோகிகளும்
  சிந்தனையில் ஞானிகளும்
  புத்தரோடு ஏசுவும்
  உத்தமர் காந்தியும்
  எத்தனையோ உண்மைகளை
  எழுதிஎழுதி வச்சாங்க
  எல்லந்தான் படிச்சீங்க
  எண்ணபண்ணிக் கிழிசீங்க?

     பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.

கண்ணதாசன்:

   கண்ணதாசன் (ஜூன் 24, 1927 - அக்டோபர் 17,1981) புகழ்பெற்ற தமிழ் திரைபடப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களில் 
ஆசிரியராகவும், தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்தார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

கவிதை:

  கம்பன் ஏமாந்தான்
கம்பன் எமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அறுஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதினால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

COOP exam syllabus (தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பாடத்திட்டம் )

தொலைதூர கனவுகள்...