நெகிழி பயன்பாடுகள், அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு,நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள் Plastic Uses of plastic,Contribution of students towards avoiding plastic in our daily life, Quotes for using plastic
நெகிழி பயன்பாடுகள்
Plastic Uses of plastic
அன்றாட வாழ்வில் நெகிழியினை தவிர்ப்பதற்கு மாணவர்களின் பங்கு
Contribution of students towards avoiding plastic in our daily life
நெகிழி பயன்படுத்துவதற்கான மேற்கோள்கள்
Quotes for using plastic
நெகிழி(பிளாஸ்டிக்) அன்றாட வாழ்வில் மிகுதியாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறி இன்று மனிதகுலத்தின் மாபெரும் தீங்குகளை உருவாக்க கூடிய அளவு உருவாகி நிற்கிறது.
இந்த நெகிழி நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பல்வேறு விதங்களிலும் வடிவங்களிலும் இன்றியமையாத ஒன்றாக வழக்கப்படுத்திக் கொண்டதின் விளைவு இன்று நெகிழி பொருட்களின் களிவுகளினால் இந்த புவியின் இயற்க்கை சூழ்நிலை முற்றிலும் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளது.
நாம் அனைவரும் நன்கு அறிந்ததே இந்த நெகிழி எனினும் இதனால் வரும் பேராபத்துக்களை கவனிப்பதற்கும், கவனம் கொள்வதற்கும் தவறியதின் விளைவு இன்று நாம் பேராபத்தின் விளிம்பில் நிற்கின்றோம்!!.
நெகிழி -
இந்த நெகிழியினால் வரும் பேராபத்தை உணர்ந்தும் சிலவேளைகளில் நெகிழி பொருட்களை தவிர்க்க முடியாமல் தவித்தது கொண்டிருக்கின்றோம்.
நெகிழி - விழித்துக்கொண்டு செயல்பட வேண்டிய தருணமிது குவியல் குவியலாக நாம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள் இயற்க்கை சூழ்நிலைக்கு பெரும் தீங்கினை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கை சூழல் மாசுபாட்டின் விளைவு மனித இனத்தின் மீது பிரதிபலிக்கும்.
இந்த நெகிழி
நெகிழிகள் வெப்ப மேலாண்மை தன்மையின் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கலாம்,
இளகும் வகை (தெர்மோபிளாஸ்டிக்) மற்றும் இறுகும் வகை (தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்)
இறுகும் வகை(தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்)
- இளகும் வகை
- இறுகும் வகை
இறுகும் வகை
இவற்றிற்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு குளிர்ந்த பின் உருக்கி இவற்றின் வடிவங்களை மாற்ற இயலாது.
மெலமின் ரெசின் -
மெலமின் ரெசின் எளிதில் தேயாது எனவே மின்சார சாதனங்கள் செய்ய பயன்படுகின்றன. குறிப்பாக மின் விசிறிகள்.
பீனாலிக் ரெசின்
பீனாலிக் ரெசின் எனப்படும் பேக்லைட் மலிவுவிலை மின்சுவிசுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்ய பயன்படுகின்றன.
(தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்)
குளிர்ந்து கடினமானதும் ஒருமுறை வெப்பமயமாக்களில் தன் பரிமாணங்களை மாற்றும் தன்மையினை இழக்கும் நெகிழிகள் தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக் எனப்பட்டன.
எ.கா - பேக்லைட் மற்றும் மெலமைன்
ஆல்கைடு ரெசின் -
அல்கைடு ரெசின் நெகிழிகள் ஈரம், வெப்பத்தினால் பாதிக்கப்படாது. மேலும் உறுதியானது, கடினமானதும், வளையகூடியதும் ஆகும். இவை மின்சாரத்தை கடத்தாது ஒளி புகும் எளிதில் நிரமேற்க்கும் தன்மையினால் இவை விமானம், மோட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், கடத்தாப் பொருட்கள்(இன்சுலேடர்கள்) செய்ய பயன்படுகின்றன.
இளகும் வகை
(தெர்மோபிளாஸ்டிக்) -
வெப்பத்தில் மென்மையாகி மீண்டும் தன் நிலையினை அடையும் நெகிழிகள் தெர்மோபிளாஸ்டிக் எனப்படுகின்றன. இவை மறுசுழற்சி செய்யக்கூடியவை
எ.கா - கோபலிமர் வினார், நைலான், பாலி புரோபலின், பாலி வினைல் குளோரைடு(PVC), பாலி அசிட்டேட் நெகிழி, வினைல் அக்ரிலிக் நெகிழி, செல்லுலோஸ் அசிட்டேன், செல்லுலாயிட், ஈதைல் செல்லுலோஸ் ஆகியன இளகும் வகை நெகிழிகள் ஆகும்.
நெகிழிப் பயன்பாடுகள் -
நெகிழிப் பொருட்கள் பயன்பாடுகள் இன்றைய சூழலில் அபரிவிதமானதாக உள்ளது. காலத்திற்கேற்ப பல பயன்பாடுகளுக்கு நெகிழி இன்றியமையாத ஒன்றாக மாறி இருக்கிறது. காலை எழுந்ததும் தொடங்கும் நெகிழிகள் பயன்பாடு தொடர்ந்து இரவு உறங்கச் செல்லும் வரை நாம் உபயோகிக்கும் அனைத்திலும் நெகிழியின் ஆக்கிரமிப்பு உள்ளது.
காலை பல்துலக்க பயன்படுத்தும் பல்துலப்பானில் இருந்து உறங்க பயன்படுத்தும் படுக்கை வரையில் நெகிழியின் பயன்பாடுகள் உள்ளன.
இரும்பு, அலுமினியம், கண்ணாடி, இரப்பர், மரம் இவற்றிலான பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழி பொருட்களின் பயன்பாடு உள்ளது
மாற்றுவழிகள் -
நெகிழி பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் சுற்றுச் சூழலை நாம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி வகைகளே மிகப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. சுற்றுசூழல் மாசுபாடு உலகின் அனைத்து உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களின் மாற்றாக துணிப்பை, காகிதப்பை, இலை, கண்ணாடி அடைப்பான், சணல் போன்றவற்றை நெகிழியின் மாற்றாக உபயோகப்படுத்தலாம்
குவளைகள் பாக்குமட்டையால் ஆன பொருட்களை பயன்படுத்தலாம்
பால் பொருட்களை எளிதில் மட்கக் கூடிய காகித பைகளில் அடைத்து பயன்படுத்தலாம்
நெகிழிப் பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம்
தவிர்க்க முடியாத் தருணங்களில் 40 மைக்ரான் தடிமன் அளவுள்ள பைகளை பயன்படுத்தலாம். இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம்
நெகிழிக்கு மாற்றாக சிலிக்கான் மணலுடன் மக்னீசியம் வேதிவினை புரிந்து கிடைக்கும் சிலிக்கான் சேர்மத்தினை பயன்படுத்தலாம் இவை ரப்பர் போல தன்மையுடையது...
நெகிழிகள் பயன்கள் -
- விலை மலிவு
- கண்களைக் கவரும் பல வண்ணங்களில் கிடைக்கும்
- எடை குறைவு
- எளிதில் உடையாது
- காற்று, நீர், சாதாரண வேதிப்பொருட்களினால் பதிப்படையாது.
- மின் கசிவினை ஏற்படுத்தாது.
போன்ற காரணங்களினால் நெகிழிகள் பண்படுத்தப்படுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக